தோல்விகளுக்கு நன்றி!

Man on top of mountain. Element of design.

Man on top of mountain. Element of design.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்….

இந்த வரிகளை எங்கோ படித்ததுபோல இருக்கிறதா? விக்கிரமாதித்தன் கதையின் ஆரம்ப வரிகள் இவை. எத்தனை முறை எத்தனை கதைகள் படித்திருப்போம். வேதாளம் கதை சொல்லுவதும், இறுதியில் அது கேட்கும் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தன் சரியான பதில் சொல்ல மறுபடி வேதாளம் முருங்கை மரம் (வேப்பமரம்?) ஏறுவதும், பதுமைகள் சொல்லும் கதைகளுமாக நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு சென்று விடும் இந்தக் கதைகள். நான் இதில் முக்கியமாக சொல்ல விரும்புவது ‘தன் முயற்சியில் சற்றும் தளராத’ என்கிற வார்த்தைகளைத்தான்.

குழந்தைகளுக்கு இந்த சற்றும் தளராத முயற்சியை சொல்லிக் கொடுங்கள். இன்று உலகப்புகழ் பெற்ற எல்லோருக்கும் பின்னால் இந்த தளராத முயற்சி இருந்திருக்கிறது. இனி வெற்றி பெறப்போகிறவர்களுக்கும் இந்த தளராத முயற்சி மிகவும் தேவை.

வெற்றியின் மிதான வெறி

சரியும் தவறும் கலந்துதான் வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பதுதான் இயல்பு ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை வெற்றியை மட்டும் தனியாகப்பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகிவிட்டன. இதைப்படி இதைக்குடி இதைவாங்கு இங்கு செல் இவரிடம் போ என்றெல்லாம் பிரித்து பிரித்து சந்தையைப் பிடித்துகொண்டதன் காரணம் நமக்கு வெற்றியினன் மீது இருக்கிற வெறிதான் படிக்காதவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள் நல்ல வேலை கிடைக்காதவர்கள் பணம் சம்பாதிக்காதவர்கள் சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம் அப்படிஎன்றால் படிப்பு வேலை சொத்து சேர்த்தவர்கள் முழுமையாக வெற்றியாளர்களா பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள் விவகாரத்துகள் விவகாரங்கள் இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

நம்பிக்கையே மருந்து

யோசித்துப்பார்த்தால்  வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை வாழ்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி அது தவறினாலோ அல்லது தாமதமானலோ அதை தோல்வி என்று சொல்கிறோம் அவ்வளவுதான். எந்த தோல்வியும் பெரிதல்ல அதைப் பூதாகரமாக ஆக்கிவிடுவது நம் எண்ணங்கள்தான் அந்தந்தப்பருவத்தில் பெரிதாக தெரியும் தோல்விகள் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும். மதிப்பெண்கள் குறைவதும் காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை ஆனால் அதைக்கடந்தும் வாழ்கை ஓடும் அதைவிடச்சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும் நாளைப்பற்றியை நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.

தோல்விகளுக்கு நன்றி:

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள் விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஐமாகிறது இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும்போது அங்கு வழுக்கல் அதிகம் பார்த்துப்போ என்று சொல்லாமல் சொல்கிறார் உங்கள் விபத்தை தடுக்கிறார்.

உங்களுக்கு கிடைத்த அனைத்து தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்கு காரணமான அனைவரையும் மனதாரப்பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள். வெற்றியை தலைக்கு மேலே எடுத்துக்கொள்ள வேண்டாம், தோல்வியை மனதுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டாம் இரவும் பகலும் போல வெற்றி தோல்வி மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொள்வோம். வாழ்க வளமுடன்

2 Comments

Filed under தோல்வி, வாழ்க்கை, வெற்றி, Life

2 responses to “தோல்விகளுக்கு நன்றி!

  1. agp nmarimuthu

    Very good mathan

  2. மிக்க நன்றி ஐயா. தங்கள் ஆசீர்வாதம்.

Leave a comment