Monthly Archives: May 2011

2G Spectrum Scandal

Kanimozhi - MP, Rajyasabha

நஷ்டம் என்பது நம்முடைய சட்டைப்பையில் இருக்கும் பணத்தை எடுத்தால் மட்டுமே என்று நினைப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த 2 G அலைக்கற்றை இழப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டானதே. அலைக்கற்றை ஒன்றும் கருணாநிதி வீட்டு தோட்டத்திலே பறிக்கப்பட்ட மலர் அல்ல. கனிமொழி எடுத்து கொண்டார் என்று சொன்னால் எனக்கு நட்டம் இல்லை என்று சொல்வதற்கு இஸ்ரோ கருணாநிதி நடத்தும் கார்பொரேட் கம்பனியும் அல்ல.

இஸ்ரோ விடும் ஒவ்வொரு செயற்கை கோளும் இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டவை. நம்முடைய முதலீடு. நம் முதலீட்டில் உருவாக்கப்பட்ட செயற்கை கோளின் அலைவரிசைகளை விற்று கிடைக்கும் லாபத்தின் பங்கு, நலத்திட்டப்பணிகளுக்கு செலவிடப்படுவதன் மூலமாக நம்மை வந்தடைந்திருக்க வேண்டும்.

அனால் இடையில் சில கூட்டு சதிகளின் மூலமாக நமக்கு கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு வெகுவாக குறைந்திருக்கிறது. கூட்டு சதி செய்தவர்கள் மூட்டைகளில் பணத்தை அள்ளிக்கொண்டு, சில்லறை காசுகளை நம்மை நோக்கி வீசி இருக்கிறார்கள்.

நாம் அனைவருமே பங்குதாரர் என்ற முறையில், நாம் நஷ்டப்பட்டே இருக்கிறோம். தமிழனுக்கு என்ன இழப்பு என்று கேள்வி கேட்பவர்கள் முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே மொழி, இனம், பாலினம் எங்கிருந்து வந்தது? ஒரு பெண் தவறிழைத்தால் மன்னிக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறதா? வறுமையில் திருடியவர்களை எல்லாம், களவாணிப் பயல்கள் என்று அடித்து போலீசில் பிடித்து கொடுக்கும் நாம், ஒரு அரசியல் தலைவரின் மகள் பல கோடிகளை சுருட்டினால் பெண்ணியம் பேசுகிறோம்.

ஜெயலலிதா செய்தாரே, அவர் செய்தாரே, இவர் செய்தாரே என்று சாக்கு சொல்லும் நேரமல்ல இது. திருட்டு பயல்கள் எவனாய் இருந்தாலும் பிடித்து தண்டிப்பதே, தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதே ஒவ்வொரு இந்தியனின் கடமை.

தயவு செய்து நிரா ராடியா – கனிமொழி உரையாடல்களை திரும்ப கேளுங்கள். U – TUBE ல் இலவசமாகவே கிடைக்கிறது. இரைந்தும் கிடக்கிறது.

திலீபன் என்றொரு இனத்தமிழன் இருந்தான். காலையில் வீட்டில் சிற்றுண்டியை முடித்து விட்டு, மெரீனா கடற்கரையில் குளிர்சாதன பெட்டி வைத்து, உலக வரலாற்றில் முதன்முறையாக நான்கு மணி நேரத்துக்கும் குறைவாக ஒரு உண்ணா விரதப்போராட்டத்தை நடத்தி விட்டு, இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் இலங்கையில் போர் நிறுத்தம் செய்து விட்டதாக கூறிவிட்டார் என்று ஒரு பச்சை பொய்யை சொல்லி விட்டு, மதிய உணவிற்கு வீட்டுக்கு ஓடி உண்டு களைத்து உறங்கி விடவில்லை.

13 நாட்கள் நீரும் அருந்தாமல், மர நிழலில் ஒற்றை துணி விரித்து படுத்து கிடந்தது, நாடி நரம்புகள் எல்லாம் செயல் இழந்து, உலகமே பார்த்துக்கொண்டிருக்க இலங்கை தமிழரின் உரிமை வேண்டி உயிர் நீத்தான். ஏனென்றால் அவன் மறத்தமிழன். மானஸ்தன்.

மானும், மயிலும் மட்டுமே ஆடி 214 கோடி கடனை திருப்பி அடைத்து விடவில்லை. பரம்பரை சொத்தில் இருந்து கலைஞர் டி.வி. ஆரம்பிக்கப்படவில்லை.

கஷ்டப்படுபவர்கள் பிழைத்து கொள்ளட்டும் என்று சொல்லி உத்தரவாதமில்லாத கடனாக பல கோடிகளை அள்ளி கொடுக்க ஷாகித் பால்வா ஒன்றும் சமூக சேவகரும் அல்ல.

இந்தியா முன்னேறுவதற்கு உங்கள் பங்களிப்பை செய்யாவிட்டாலும். பின்னோக்கி தள்ள துணை போகாதீர்கள். கண்ணிருந்தும் குருடனாய் வாழ்வதை விட கேவலமானது ஒன்றும் இல்லை.

~ நன்றி, மனோ திருச்சி.

Advertisements

Leave a comment

Filed under 2g Spectrum