Tag Archives: நான்

கற்றது ஒழுகு

ஆடம்பர வாழ்க்கை
தேவையான அவசர
உலகம் இது!
ஆகவேதான்
சுயநலம் உன்னை
சூறையாடிக்கொள்கிறது!

ஊடகங்கள்கூட
உறிஞ்சிக்கொள்கின்றன
விஷத்தை!
அறிவாளிகள் கூட
அகப்பட்டுக் கொள்கின்றனர்
இவற்றில்!

விவாதங்கள்;
வெற்றிப் பெறலாம்
அது
அவனவன்
திறமையைப் பொறுத்தது!

வேர்கள்
அறிய வேண்டும்
விளை நிலம்
அறிய வேண்டும்
விவசாயியையும்
அறிய வேண்டும்!

ஆண்டவனை நம்பும்
ஆன்மிக வழியிலும்
விண்ணை முட்ட எண்ணும்
வியாபார வழியிலும்
அமைதியை நாடும்
அன்றாட பொழுது போக்கிலும்
எங்கெல்லாம்
உனக்குப் பிரியமுண்டோ
அங்கெல்லாம்
வாழைப்பழத்தில்
ஊசியைப்போல்
வஞ்சசகர்கள்
நஞ்சை கலக்கின்றனர்!

பாசமுடன்
ஊட்டுகின்றார்
அவசரப்பட்டு
அள்ளி உண்டுவிடாதே
அழிந்து விடும் இனமே!

அறிவை பயன்படுத்தி
அவற்றை அழித்துவிடு
இல்லையேல்
அவற்றிலிருந்து
அமைதியாக விலகிவிடு!

படித்தவன்
பயங்கரவாதம்
பாலில்தான்
விஷம் கலக்கும்!

Advertisements

Leave a comment

Filed under God, Life

வாழ்வதற்கே வாழ்க்கை!

Life

இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்

நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மாரத்தான் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே

பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்

இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்

உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்


ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்

யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை

யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே

உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ
ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்

வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்

தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல
நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்

குட்டக் குட்ட
குனியாதே,
குட்டக் குட்ட
உருவாகு

வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை

உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட
நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்

எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு.
அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’

கடலில் எத்தனை புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதில் உலகுக்கு அக்கறையில்லை.
கப்பலை கரைசேர்த்தீர்களா என்பதைச் சொல்லுங்கள்

— பாசில் முஹம்மது கான்

Leave a comment

Filed under Life