சின்னஞ்சிறு கிளியே…

Barathiyar

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

                                                                  – மகாகவி சுப்பிரமணிய பாரதி

Advertisements

Leave a comment

Filed under Bharathiyar, Poem

தன்னம்பிக்கை

a93fe07830c7a1ded35bff4fcc2452ea

மலர்ந்த பூக்களெல்லாம்
மாலைகளாய் ஆவதில்லை
வளர்ந்த மரங்களெல்லாம்
வாசற்கதவுகளாய் ஆவதில்லை… !

விளைந்த கற்களெல்லாம்
மோதிரமாய் ஆவதில்லை
விழுந்த மழைத்துளிகளெல்லாம்
உயித்துளியாய் ஆவதில்லை… !

எழுதும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் ஆவதில்லை
உழுத நிலங்களெல்லாம்
விளைச்சல்களாய் ஆவதில்லை… !

பிறந்த மனிதர்களெல்லாம்
மேதைகளாய் ஆவதில்லை
திறந்த மனங்களெல்லாம்
புனிதர்களாய் ஆவதில்லை… !

நேசித்த இதயங்களெல்லாம்
காதலாக ஆவதில்லை
வாசித்த இசைகளெல்லாம்
சிம்பொனியாய் ஆவதில்லை… !

இணைந்த கைகளெல்லாம்
நம்பிக்கையாய் ஆவதில்லை
மணந்த பெண்களெல்லாம்
மல்லிகையாய் ஆவதில்லை… !

தொடங்கும் கட்சிகளெல்லாம்
ஆட்சிகளாய் ஆவதில்லை
இசைக்கும் பாடல்களெல்லாம்
விருதுகளாய் ஆவதில்லை… !

செய்த சிலைகளெல்லாம்
தெய்வங்களாய் ஆவதில்லை
புனைந்த கவிகளெல்லாம்
பரிசுகளாய் ஆவதில்லை…!

— நாகூர் கவி

Leave a comment

Filed under வாழ்க்கை, Life

கனவு புகட்டிய பாடம்

கனவு

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது

எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ …!
காட்சிப்படுத்துகிறேன்

மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்.
எழுதுகோலின் உடலுக்குள்
ஊற்றி மூடியிருக்கும்.

எழுதும் தாளின்
தலைப்பு தேடியே
தலை வெடித்தது
எப்படி இறுதிவரை
எழுத முடியுமோ..?

என் மூளை குழம்பிய
மூன்றாவது நிமிடம்
தமிழ் அன்னை
வானத்திரையில் காட்சியளித்தாள்..!

தமிழ் அன்னையை
வணங்கிய மூளை
உளர ஆரம்பித்தது…!

தாயே…….!
அமுதே…!
உனை எப்படி போற்றுவேன்?
எதை சொல்லி எழுதுவேன்?
வள்ளுவனின் குறள்களும்
நினைவில் இல்லை
பாரதியின் பாடல்களும்
நினைவில் இல்லை.
கம்பனின் கட்டுத்தறியும்
என்னிடமில்லை

மொழியறிவும் எனக்கில்லை
இலக்கணமும் தெரியவில்லை
இலக்கியமும் படித்ததில்லை
என்செய்வேன் தாயே… ?
என் தமிழ்தாயே…!

ஐய்யகோ…! தமிழனா நான்..?
தமிழறிவு முழுவதுமாய் இல்லையே..!
நானா தமிழன்………..?
பிழையின்றி கவியெழுத தெரியவில்லையே..!
நானா தமிழன்…………?

தாயே …………..!
என்னை மன்னித்துவிடு!
இந்த நொடியிலே
எனை கொன்றுவிடு !

அழகாய் புன்னகைத்த
தமிழ் அன்னை.

தமிழனே………!
கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க
கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே
ஏனடா மகனே… ? என்னாயிற்று?
பொறுமை ! பொறுமை !!
ஆவேசப்படாதே……!

வரமென்ன வேண்டும்
கேள்..! அருளுகிறேன் “

உனைப்போற்றி எழுதிட
உனை வான் அளவு
புகழ்ந்து எழுதிட
ஒரளவாயிருக்கும்
என் மொழியறிவு
மலையளவு
வளர்ந்திடவேண்டும்
வரம் தருவாயா ? தாயே !
என் தமிழ் தாயே..!

மீண்டும் புன்னகை பூத்தாள்
என் இனிய தமிழ் அன்னை.

”தமிழனே….!
மகனே…!

இலக்கணம் கற்று
இலக்கணம் எழுது
இலக்கியம் படி..!
இலக்கியம் படை..!

பிறமொழியின் தூசியை
என்விழியில் தூவாதே..!

புலமை பெற்று
புது கவிதை எழுதினாலும்
மரபு கவிதையை மறவாதே..!

இதனை பின்பற்று !
என் வரம்
பின்பு வரும்.

மீண்டும் சந்திப்போம்!..”

மெலிதாய் புன்னகைத்தே
மெதுவாய் தன்னை
மறைத்துகொண்டாள்
தமிழ் அன்னை.!

பிரபஞ்சத்தை மிஞ்சிய
நீண்ட தாளையும்
பாரதியின் மீசையளவு
எழுதுகோலையும்
பத்திரப்படுத்திய மூளை..

என்னுடலை
தட்டியெழுப்பியது
கனவு கலைந்தது
என்னுள் ஏதோ
புதியதாய் ஒரு தெளிவு..!

உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயிர்மெய்யெழுத்து
ஆயுத எழுத்து
மீண்டும் படித்து
எழுதிட எழுதுகோலை
தேட கட்டளையிட்டது
கனவு கண்ட என் மூளை…!

— இரா. சந்தோஷ் குமார்

Leave a comment

Filed under வாழ்க்கை, Life

Circus in Three Rings

circus2

In the circus tent of a hurricane
designed by a drunken god
my extravagant heart blows up again
in a rampage of champagne-colored rain
and the fragments whir like a weather vane
while the angels all applaud.

Daring as death and debonair
I invade my lion’s den;
a rose of jeopardy flames in my hair
yet I flourish my whip with a fatal flair
defending my perilous wounds with a chair
while the gnawings of love begin.

Mocking as Mephistopheles,
eclipsed by magician’s disguise,
my demon of doom tilts on a trapeze,
winged rabbits revolving about his knees,
only to vanish with devilish ease
in a smoke that sears my eyes.

– Sylvia Plath

Leave a comment

Filed under Life

சதுரகிரி மலை பயணம்

sl-006

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும், ஒவ்வொரு முறையும் அதன்
பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.

இன்று மகாலிங்க மலையைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் –செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் ” கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தேடல், பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும்.

Leave a comment

Filed under தமிழ், Tamil

காலம் தந்த கலாம்!

Photo courtesy Rajesh

ஐயா திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

விண்ணையும் மண்ணையும்
ஆயிந்தது போதுமென்று
காற்றோடு கலந்திட்ட கடவுள் துகளே

இருபது தமிழரின் ஈரம் காயாத ஆந்திரம்
கற்றை கண்ணீர் சிந்துகிறது உமக்காய்

காவிரித்தாய் பிறக்கும் கர்நாடகம்
கால் கடுக்க நின்றது
நும் கால்களில் கண்ணீர் சிந்த

முல்லை பெரியாரில் முறைத்த கேரளம்
நாளைய வளர்ச்சிக்கு வேண்டுது
இந்த மறத்தமிழனின் (அப்துல் கலாம்) எம்பளம் (அடையாளம்)

தமிழகத் தலைவன் தான்தானென்று
தத்தித் தாவும் கட்சிகளின்
தலையில் குட்டியது உலகம்

உலக தமிழனின்
உன்னதத் தலைவன்
ஒருவன் தான் யென்று
அதுவும் நீவிரென்று

கடைக்கோடி தலைமகனே
வாய்ச்சொல் வீரர்கள்
வாயடைத்து நின்றார்கள்
உங்கள் மௌனத்தின் முன்பு
பொய் பேச முடியாமல்

யாதுமாகி நின்றீர் அய்யா
எளிமையால் இப்பூவுலகை வென்றீர்

கனவு காண்கிறேன் நான்
1000 முறை பிறந்தெனும்
ஒருமுறையாவது வாய்க்குமோ
உம் போன்ற பயணம்(மரணம்) எனக்கும்….

— நிழலன்

Leave a comment

Filed under Life

சொந்த வீடு தரும் மகிழ்ச்சி!

iit-low-cost-house1

வீடு கட்டுவதில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. இன்று வீடு கட்டுபவர்களை விட அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குபவர்களே அதிகம். இதற்குக் காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வீட்டு மனைகள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலையேற்றம். அதுமட்டுமல்ல இப்போத்து கட்டுமானத்திற்கு மிக அவசியமான மணல் போன்றவற்றிற்கு நிலவும் தட்டுப்பாடும் ஒரு காரணம். இன்றைக்குள்ள பரபரப்பான வாழ்க்கையில் இவை ஒவ்வொன்றிற்கும் அலைந்து திரிந்து வீட்டைக் கட்டப் பெரும்பாலானவர்களுக்குப் பொறுமை இல்லை.

சொந்த வீட்டின் அவசியம்

இன்றைக்கு உள்ள இந்த நிலையிலும் தங்களுக்கெனச் சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு சிறிய தோட்டம் அமைத்துச் சந்தோஷமாக வாழ ஆசைப்படுவர்கள் உண்டு. நகருக்குள் மனை வாங்க இயலாத காரணத்தால் நகர்ப் பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப் பகுதிகளில் சமாளிக்கும் வகையில் வாங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினால் குடிபுகுமுன் மொத்தப் பணத்தையும் செலுத்திவிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் கட்டப்படும் தனி வீடுகளில் அது இல்லை. சிலவற்றை முடிக்க முடியாமல் போனால் கூட நாளடைவில் முடித்துக்கொள்ளலாம் என்கிற வசதி உள்ளது. இப்போதெல்லாம் வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு முன்னுரிமை தருகிறார்கள். இன்றைய தலைமுறை இளைஞர்கள் குறிப்பாக நடுத்தர வருவாயுள்ளவர்கள் சொந்த வீட்டின் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே வீடு வாங்குவதில் ஆர்வமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள். திருமண ஜோடியைத் தேடும் விளம்பரங்களில் எல்லா வசதிகளையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் கொண்ட சொந்த வீடு உள்ளது என்பதைப் பெருமையுடன் சொல்வதைப் பார்க்க முடிகிறது. இச்சூழ்நிலையில் தனி வீடு கட்டுபவர்கள் சந்திக்கும் சிரமங்களை முன்கூட்டியே புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தீர்மானித்துச் செயல்படுவது நல்லது.

அளைவைக் கூட்ட வேண்டாம்

கட்டப்படும் வீட்டின் வரைபடம் தயாரிக்கும்போதே பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு தயாரிப்பது அவசியம். வீடு கட்ட முற்படும்போது மனதில் எழும் ஆசைகள், கனவுகள் பட்ஜெட் தொகையை மறக்கடித்துவிடும். ‘வீடு கட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ ‘அட்ஜெஸ்ட் செய்துவிடலாம்’ ‘சமாளித்து விடலாம்’ என்றெல்லாம் தோன்றும். ஆனால் இம்மாதிரி அஜாக்கிரதை வீட்டைக் கட்டி முடிக்க முடியாமல் திணற வைக்கக்கூடும்.

வரைபடத்தில் உள்ள அளவுகளில் ஓரடி கூட்டினால் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டில் பெரிய அளாவு துண்டு விழும். இதை இப்போதே நினைவில் கொள்ளலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீடு கட்டினார். வானம் தோண்டப்பட்டுக் கிடந்த நிலையில் நண்பரின் மனைவில் வந்து பார்த்துள்ளார். வானம் தோண்டப்பட்ட நிலையில் அறைகள் சிறியதாகத்தான் தெரியும். ஆனால் கட்டி முடிக்கும்போதுதான் அதன் முழு வடிவத்தை நாம் காண முடியும். மனைவிக்கு சமையலறையும் படுக்கையறையும் சிறியதாக இருப்பாகத் தோன்றியுள்ளது.

கணவர் குறைபட்டுக்கொண்டார். நண்பரும் மனைவியின் விருப்பதிற்கிணங்க அறையை அகலப்படுத்தியுள்ளார். இரண்டு மூன்று அடிகள்தான் அகலப்படுத்தினார். ஆனால் அவர் திட்டமிட்டிருந்த பட்ஜெட்டில் 5 லட்சத்திற்மும் மேல் அதிகரித்தது.

காற்று வர வழிசெய்வோம்

வீட்டினுள் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டுமானால் வீட்டினுள் காற்று நுழைந்து வெளியேறும் வகையில் கதவுகளையும், ஜன்னல்களையும் அமைக்க வேண்டும். கதவுக்கு நேராக கதவு, ஜன்னலுக்கு நேராக ஜன்னல் அமைத்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். எல்லா அறைகளிலும் ஜன்னல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஆரோக்கியத்திற்கு வெளிச்சமும் காற்றும் அவசியம்

பரணைத் தவிர்ப்போம்

படுக்கையறை அறைகயின் எல்லாப் பக்கங்களில் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் வரவேற்பறையிலும் தேவையில்லாமல் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் பரண் அமைக்கும்போது அதில் தூசிகள் அடையும். ஒட்டடைகள் உருவாகும். அதுபோல பல்லி, கரப்பான், ஆகியவற்றின் வசிப்பிடமாக இம்மாதிரியான பரண் ஆகிவிடும்

தளத்தை உயர்த்துவோம்

பொறியாளரின் முறையான ஆலோசனையைப் பெற்று வீட்டுத் தளத்தின் உயரத்தைப் பத்தடிக்கு மேல் சற்று உயர்த்தினால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கோடைக் காலத்தில் மொட்டை மாடியிலிருந்து வீட்டினுள் இறங்கும் வெயிலும் தக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். தென்னை மட்டைகளை மொட்டை மாடி முழுவதும் இல்லாவிட்டாலும் படுக்கையறை, வரவேற்பறைப் பகுதிகளிலும் பரப்பிவைத்தால் வெயிலின் தாக்கம் பெருமளவு இருக்காது.

தளங்களை மேம்படுத்துவோம்

கூடுமான வரையில் வழுக்கும் தளங்களை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியான வழுக்கும் டைல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் புழங்குவதற்கு ஏற்றதாக இருக்காது. குளியலை, கழிவறை போன்ற அறைகளில் சொரசொரப்பான டைல்களையே அமைக்க வேண்டும்.

மின் இணைப்பையும் திட்டமிடலாம்

சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்ற அறைகளில் நமது உபயோகத்திற்குத் தகுந்தவாறு விளக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும். மின்சிக்கனம் அவசியம் என்பதால் எல்லா அறைகளுக்கும் அதிக மின் சக்தியை எடுக்கும் விளக்குகள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எங்கெங்கு மின் இணைப்பு தேவைப்படும் என்பதை முதலிலேயே தீர்மானித்து கட்டிடத்திற்குள்ளே குழாய்களைப் பதித்துவிடுவது நல்லது. கட்டிடம் கட்டி முடித்த பிறகு குழாய் இணைப்பிற்காகத் துளையிடுவதைத் தவிர்க்கலாம்.

கடைசியாகத் சில வார்த்தைகள்

வீட்டின் கூரையில் விழும் மழை நீரை விரயம் செய்யாத வகையில் எல்லா மழை நீரையும் நேரடியாக நீரைச் சேமிக்கலாம். இல்லையெனில் பூமிக்குள் இறக்கலாம். அதற்கான முறையான மழை நீர் சேகரிப்பு நடைமுறைகளின் படி அமைக்கலாம். மேலும் வாஸ்து, ஐஸ்வர்யம் என்ற பெயரில் அதிக அளவு செடிகோடிகளை வீட்டிற்குள் வளர்க்காதீர்கள் வீட்டிற்குள் பூச்சிகளும் மரவட்டைகளும் கொசுக்களும் தொல்லை தர ஆரம்பித்துவிடும்.

Leave a comment

Filed under House, Life