மரங்களை வெட்டுங்கள்!

நமது நாட்டில் பருவமழை, நிலத்தடிநீர், வானிலை மாற்றம் இப்படி எத்தனையோ காரணங்களுக்கு இந்த சீமை கருவேலமரமும் ஒரு காரணம் என்றால் நம்பமுடிகிறதா?

அதிகமாக கிராமப்புறங்களில் புதர்செடி போன்றும் ஒருசில இடங்களில் மரமாகவும் உள்ள இந்த சீமை கருவேலமரம் எந்த ஒரு நன்மையும் மனிதனுக்கும், விலங்குகளுக்கும், பரவைகளுக்கும்கூட கொடுப்பதில்லை என்ற பயனற்ற பெருமையை கொண்டது.

பொதுவாக மரங்கள் இரவு நேரத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடும் பகல் நேர்த்தி ஆக்சிஜனையும் வெளிவிடும். ஆனால் இந்த சீமை கருவேலமரம் அத்தகு மாறாக செயல்பட்டு மற்ற நச்சு வாயுவை வெளியிடுகிறது.

நிலத்தடி நீரை இதன் வேர்கள் அதிவிரைவாக உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மையும் இதன் கூடுதல் பலம்.அதனால் தான் இவை அதிகமுள்ள பகுதியில் மழை பொய்த்துவிடுகிறது.

11403263_496425330505024_7405949796494969386_n

இதன் மரங்களில் எந்த பறவையும் கூடுகட்டது. ஆடு, மாடு போன்ற எந்த விலங்கையும் சீமை கருவேலமரத்தில் யாரும் கட்டுவதில்லை. பொதுவாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுகோட்டை, விருதுநகர் மற்றும் தேனி அதிகம் காணப்படுகிறது.  இந்த மரத்திலிருந்து வெளியாகும் ஒருவிதமான வாயு விலங்குகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாம் இந்த சீமை கருவேலமரம்.

ஆனால் கேரளாவில் இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு செழிப்புடன் இருக்கிறது. இத்தகைய விஷமுடைய பயன்தராத மரத்தை அழித்து, சுற்றுச்சூழலையும் இயற்கையையும் செழிப்படைய முயற்சி செய்வோம் தமிழகத்திற்காக.

சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இந்த தாவரத்தை தடை செய்யக் கோரியும் உடனடியாக அகற்றக் கோரியும் மாநில அளவில் ஆர்பாட்டங்கள் , உண்ணாவிரதங்கள் , கோரிக்கை மனு அளித்தல் , உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்துள்ளது. மேலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை நம்பி சுமார் 100 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி கவனிப்பாரின்றி சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால், நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக்கூடிய இந்த சீமைக் கருவேலம் மரங்களால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதாக அந்தக் கிராம மக்கள் போராடியுள்ளனர். தமிழ்நாட்டில், மதுரை சம உரிமை அமைப்பு சார்பில், வைகை ஆறு, மதுரை கண்மாய்கள் மற்றும் தமிழக நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் இந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். இவை நிலத்தில் நீரில்லாத போது, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன,மேலும் கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுவதாலும் வளிமண்டலம் மாசுபடுகிறது. எனினும் தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

நீங்களும் பங்கேற்க மற்றும் இணைய http://aaproject.org/join/

Advertisements

Leave a comment

Filed under Agriculture

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s